தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Monday, 14 December 2015

தவளை தன் வாயால் கெடும், மனிதன்‬ ‪தன் நடத்தையால் கெடுவான்‬...!!

‪தவளை தன் வாயால் கெடும், மனிதன்‬ ‪தன் நடத்தையால் கெடுவான்‬...!!

தவளையானது மழை தண்ணிர் நிரம்பி இருப்பதை பார்த்து, தன் மிகுந்த சந்தோஷத்தை, தன் வாயின் சத்தத்தின் மூலம் வெளிப்படுத்தி, தன் எதிரியாக பாம்புக்கு தன்னை வெளிப்படுத்தி மாட்டிகொண்டு பலியாகின்றது...!!! இதற்கு முன்பு அந்த தவளை அமைதியாக இருந்தது போலவே, மழைக்கு பின்பும் அமைதியாக இருந்து இருந்தால், அந்த தவளை மகிழ்ச்சியாக இருந்து இருக்கும், தன் எதிரியாக பாம்பிடம் தப்பித்தும் இருக்கும்...!!

இதேபோல தான் மனிதர்களாகிய நாமும் இருக்கின்றோம், குறைவான வாழ்க்கை, போதுமான வாழ்க்கை வாழும் பொழுது, கொஞ்சம் சரியாக, அமைதியாக ஆனவத்திலும், பெருமையிலும் ஆடாமல் வாழ்ந்துகொண்டு வருகின்றோம்..!!. ‪ஆனால் கொஞ்சம்‬, ‪பணமும்‬,‪அதிகாரமும்‬, ‪பதவியும்,‪‎ஞானமும்‬ ‪கிடைத்தது விட்டது என்றால்‬ ‪ அகங்காரமும்,ஆணவமும்,பெருமையும்‬  ‎நமக்குள் தலை தூக்கி ஆடுகின்றது‬..!!

‪நாமும் அந்த தவளை போலவே தன்‬ ‪வாயினாலும் கிரியையினாலும்‬ ‪நம் ஆணவத்தை,பெருமையை‬ ‪வெளிப்படுத்தி சாத்தானாகிய நம்‬ ‪எதிரிக்கு அழைப்பு கொடுத்து‬  ‎விடுகின்றோம். பின்பு நமக்கு‬ ‪துன்பத்தையும் வேதனையும்‬ ‪‎விளைவித்து கொள்கின்றோம்‬...!!!

பணம், பதவி, அதிகாரம், ஞானம் என்பது இல்லாத போது, நாம் எப்படி ஆணவம், பெருமை இல்லாமல் அடக்கமாக இருந்தோமோ, அப்படியே, அவைகள் வந்த பின்பும் நாம் இருந்தோம் என்றால், நம் வாழ்க்கையில் எந்த பிரச்சனைகளும், வேதனைகளும் இல்லாமல் வாழலாம்...!!

‪ஆதலால் நாம்‬ தாழ்வானாலும்,‪‎உயர்வானாலும்‬,‪ஏழையானாலும்,‎பணக்காரனாலும்‬,‪ஞானியானாலும்‬ ‪எப்பொழுதும் எந்த நேரத்திலும்‬, ‪தாழ்மையாகவும்,எளிமையுமாகவும்‬ ‪ வாழ்வோம் நம் நடத்தையின் மூலம்….‬
வாழ்க வளமுடன், நலமுடன்.,வாழ்க பல்லாண்டு ..,

No comments:

Post a Comment